Wednesday, October 18, 2023

என் சாய் - முதல் அனுபவம

என்னுடைய சிறு வயதில்  எனக்கு பக்கத்து வீட்டில் சாய் பஜன் நடக்கும். நானும் கலந்து கொள்வேன். பஜனை பாட்டு பாடுவேன். ஆனால் அப்போது எனக்கு விவரம் தெரியாது. என் சகோதரியும் அருகில் உள்ள பெண் குழந்தைகளும் நாட்டிய நாடகம் தயார் செய்து கொண்டு புட்டபர்த்திக்கு செல்வார்கள். புரந்தரதாசர், கிருஷ்ணலீலா போன்ற நாட்டிய நாடகங்கள் சத்யசாய் முன்பு நடத்துவார்கள்.

என் முதல் அனுபவம்

நான் அப்பொழுது ஒரு லாரி ஆபீஸ் இல் பில் போடும் வேலையில் இருந்தேன். எனக்கு அப்பொழுது மாத சம்பளம் 200 ரூபாய், வருடம் 25 ரூபாய் இங்ரிமென்ட் கிடைக்கும்.
திடீரென சில பிரச்சனைகளின் காரணமாக அந்த லாரி ஆபீஸ் மூடப்பட்டது. நாங்கள் அந்த ஆபீஸை அன்ட்வோவர் செய்வதற்காக ஒரு ஆபீஸர் வந்திருந்தார். ஆனால்  நாங்கள் அவரிடம் எங்களின் வெறுப்பை காட்டினோம். எங்கள் வேலை போய்விட்டதன் காரணமாக அவரை அவமரியாதை செய்து விட்டோம், கேவலமாகவும் பேசி அவரை நாங்கள் அழ வைத்து விட்டோம்.
எங்கள் லாரி ஆபீஸ் கிண்டியில் இருந்தது. நாங்கள் சிறிது நேரம் அங்கிருந்து கிளம்பி கிண்டி சாய் பாபா கோவிலுக்கு சென்றோம். அது எங்களுக்கு சாய்பாபா கோவில் என்று தெரியாது, தெரியாமலே நாங்கள் உள்ளே நுழைந்து விட்டோம்.அதன் பிறகு அங்கு அமர்ந்து சிறிது நேரம் மௌனமாக இருந்தோம். எங்களுக்கே தெரியவில்லை எப்படி அப்படி ஒரு அமைதி எங்களுக்கு வந்தது என்று?. மனம் மிகவும் சாந்தமாக ஆனது. நாங்கள் செய்த செயலுக்காக நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். என்னுடன் வந்த நண்பரும் நானும் ஒரே சமயத்தில் நாம் செய்தது தவறு இல்லையா என்று கேட்டுக் கொண்டோம். எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் எப்படி அவ்வாறு தோன்றியது என்று தெரியவில்லை. என்னுடன் வந்தவர் முஸ்லிம் நண்பர். நாங்கள் இருவரும் மறுபடியும் ஆபீசுக்கு சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டோம். அவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு அமைதியாக வீடு திரும்பினோம். இந்த அமைதி எனக்கு முதல்முறையாக ஏற்பட்டது. அப்படி ஒரு சாந்தமான நிகழ்வு எங்களுக்கு நடந்தது. அன்று முதல் எனக்கு சாய் பக்தி  மலர்ந்தது.
நான் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் படித்திருந்தேன் ஆனால் லாரி ஆபீஸ் வேலை செய்து கொண்டிருந்தேன் இரண்டு வருடமாக நான் இன்ஜினியரிங் மறந்து இருந்தேன். இந்த  வேலையில் இருந்து நீக்கப்பட்டவுடன் நான் உடனே சில கம்பெனிகளுக்கு இன்ஜினியரிங் வேலைக்காக முயற்சி செய்தேன். இதுவே என் வாழ்க்கையில் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. படிப்படியாக உயர்ந்து 35 வருட அனுபவம் பெற்றிருக்கிறேன். இப்பொழுது வாழ்வு நிறைந்து 60 வயதில் இருக்கிறேன். 
சத்ய சாய்பாபாவும் சீரடி சாய்பாபாவும் எனக்கு பல சமயங்களில் மன அமைதியை கொடுத்திருக்கிறார்கள். என் வாழ்வு முன்னேற நிறைய அருள்புரிந்து இருக்கிறார்கள். நான் எப்பொழுதெல்லாம் மனக்கஷ்டத்தில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறார்கள்....